ஜன்னல்கள் (Windows)
Social media is a window to a person's life. We come across several people and their reels, posts and videos everyday. We all do have a point of view on everything we see on the social media. Shall we step back a bit and think of this in a bigger picture?
We all do spread negativity or hatred by seeing these small windows of their life. Instead, we can enter into that person's reality to see what they are going through. This poem is all about that.
People who came this far, could you kindly spare few minutes and read the poem below? Thanks in advance.
ஜன்னல்கள் பல கண்டேன்,
ஜன்னல்களுக்குள் பல கதைகள் கண்டேன்,
நாளும் பல ஜன்னல்கள் கடந்தேன்,
ஒவ்வொரு ஜன்னலை கடக்கும் பொழுது,
என் கண்ணோட்டத்தை தெரிவித்தேன்.
சற்றே திரும்பி பார்த்தால்,
ஒரு கூட்டமே அந்த ஜன்னல்களை கண்டது,
அனைவருக்கும் கருத்து மோதல் நடந்தது,
யார் சரி, யார் தவறு, ஆதரிப்பு, எதிர்ப்பு,
வெறுப்பு, பொறாமை, ஏக்கம், துக்கம்,
என உணர்வுகளின் கதம்பமாக இருந்தது.
ஜன்னலுக்குள் இருக்கும் நபரை பார்க்கையில்,
என் மனதிற்குள் பல பல கேள்விகள்,
ஏன் இந்த உணர்வுகளின் கதம்பங்கள்,
ஏன் இந்த எதிர்மறையான எண்ணங்கள்,
என சிந்தித்து பார்க்கையில்,
ஜன்னலுக்கு வெளியில் இருந்து பார்ப்பதற்கில்லாமல்,
ஜன்னலுக்குள் சென்று பார்த்தால் புரிந்தது,
அவர் அவரின் வாழ்க்கையின் யதார்த்தம்,
கூட்டமே வெட்கி தலை குனிந்து கலைந்தது,
மேக கூட்டங்கள் கலைந்து காணப்பட்ட பளிச்சிடும் வானம் போல,
உணர்வு கதம்பங்களும், எதிர்மறை எண்ணங்களும் மெல்ல மெல்ல கலைந்து,
ஊக்கங்களும், நேர்மறை எண்ணங்களும் நிறைய தொடங்கியது.

Comments
Post a Comment