இருளை கடந்த வண்ணத்துப்பூச்சி (A Butterfly which crossed Darkness)


We all do the wrong things in our life or fall victim to someone's wrongdoings. Such as Abusing someone, hurting one's feelings, taking someone for granted, feeling depressed and killing ourselves and so on. 

We all would have gone through a phase in our life where we realised our mistakes. Some people cross that bridge with the help of hope, but others stumble upon and fall under the bridge which is filled with darkness.

For those people, they don't have enough hope and courage to feel the better tomorrow.

I have written this poem to the people who have a burden and darkness in their heart. To let them know that, there is a better tomorrow. 


பறந்து விரிந்த என் அழகிய வானம்,

இன்று நான்கு சுவர்களுக்குள் சுருங்கியது,

பல மையில்கள் சுற்றிய என் கால்கள்,

இன்று பத்தடி அறைக்குள் அகப்பட்டது.


குடியின் பிடியில் சிக்கிய நான்,

தூக்கத்தில் உளரும் குழந்தை போல,

தன்னிலை மறந்து அலைந்து திரிந்தேன்.

கூடா நட்பில் மூழ்கி கேடாய் மாறி,

மதியிழந்து மக்களை விரட்டும் மதயானை போல,

கொலை செய்ய முயன்றேன் அன்று நல்லுயிர் ஒன்றை.


இன்று அதன் விளைவாய் விதி விரட்டியது என்னை,

கதிரவனை காலவரையின்றி மறைக்கும் மேகம் போல,

ஒளி மிகுந்திருந்தது என் வாழ்வு இன்று இருட்டியது,

சிறை கதவின் கம்பிகளுக்குள் வாழ்க்கை சிக்கியது.


தனிமையின் கொடுமையில் என் ஆழ்மனம் புலப்பட,

நால் சுவர்களில் என் உணர்ச்சிகள் அகப்பட,

ஒளி புகாத குகையில் சிறு தீபந்ததின் வெளிச்சம் நுழைவதை போல,

என் சிறைக்குள் புகுந்தது வெளிச்சம் ஜன்னலோரத்தில்.


ஜன்னலுக்கு அப்பால் ஓர் உருவம் எனை நோக்கி விரைந்து,

ஓரறை தோழன் போல சில நிமிடங்களுக்கு வந்தது வண்ணத்துப்பூச்சி.

அறையின் இருளில் சிக்கி வெளியே செல்ல வழி தேடி,

ஜன்னலோரம் பறந்து வெளிச்சத்தை உணர்ந்து வெளியேறியது.


வெளியேறியது பட்டாம்பூச்சி மட்டும் அல்ல,

என் மனதில் உள்ள இருளும் பாரமும் தான்,

அதில் நான் அறிந்தது ஒன்றே ஒன்று,

நம்பிக்கை என்று ஒன்று இருந்தால்,

நாளை என்று ஒன்று உண்டு.

Comments

Post a Comment

Popular posts from this blog

இருக்கை கதைகள் (story of a park bench)

ஊரடங்கு (Lockdown)