மழைத்துளியின் ஸ்பரிசம் (Touch of Rain)




We all do like Rain. The smell which comes before the rain, the constant noise while raindrops hit the ground. Drenching ourselves in the rain and playing while we were a little kid. But, do we do those things now? The cost we pay to attain the adulthood is losing our inner child in the process! What is the point of living if we do not embrace things and the nature around us? I ask these questions to myself now and then.

Well if we do treat our inner child while going through the process of adulthood, Life is definitely a living heaven. I do enjoy rains, drench myself, dance in it and leave myself to go with the flow. This poem is all about the rain and how I feel when it rains.

சில்லென்று வீசிய குளிர் காற்றின் ஸ்பரிசம், 
அடங்காத கடல்நீர் அலைகளாவது போல, 
எண்ணங்களால் அலை பாயும் என் மனதை,
ஏரிநீரில் இருக்கும் அமைதியை போல,
என் மனதை நிம்மதி அடைய வைத்தது.

குளிர் காற்றுடன் கை கோர்த்து வந்த மண் வாசனயோ,
என் மனதில் புதைந்து கிடக்கும் மலரும் நினைவுகளை தட்டி எழுப்பியது.

மழைத்துளி ஒன்று என் முகத்தில் வந்து விழுந்தது,
ஒரு கணம் என் முகம் புன்னகைக்க,
மறு கணம் மழைச்சாரல் பொழிந்தது,
என் மேனியையும் மனதையும் குளிர்வித்தது.

என்னை அறியாமல் என் தலை மேல் நோக்கியது,
என் கண்கள் மூடி கைகள் பக்கவாட்டில் நீண்டது,
மளமளவென பெய்த பெருமழை,
என்னை முழுதும் நனைத்து ஈரம் ஆக்கியது.

கடந்த காலத்துக்கும் எதிர் காலத்துக்கும்,
மாறி மாறி பயணித்து கொண்டு,
நேரத்தையும் காலத்தையும் வாழ்க்கையையும் விரயம் செய்து,
ஓடிக் கொண்டிருந்த என் மனதை,

நிகழ் காலத்திற்கு கொண்டு வந்து,
ஒரு நொடியை ஒரு மணி நேரம் போல்,
ரசித்து அனுபவித்து வாழ வைத்தது ஒரு மழைத்துளி.

அந்த நொடி நான் என்னை மெய் மறந்து,
காற்றுடனும் மழையுடனும் கலந்து,
இயற்கையுடன் ஒன்றாகி வானில் பறந்து,
என்னுள் உறங்கி கொண்டிருந்த குட்டி குழந்தை எழுந்து,
கை கால்களை அசைத்து ஆட்டம் போட்டது.

வாழ்க்கை என்பது இந்த நொடியில் வாழத்தான்,
என்று உணர வைத்த அந்த மழைத்துளிக்கும்,
அற்புதமான இந்த மழையை கொடுத்த இயற்கைக்கும் நன்றி கூறி மனம் நிறைவடைந்தது.

Comments

Popular posts from this blog

இருக்கை கதைகள் (story of a park bench)

ஊரடங்கு (Lockdown)

இருளை கடந்த வண்ணத்துப்பூச்சி (A Butterfly which crossed Darkness)