தனிமை (Solitude)


One fine evening, I was travelling on a suburban train. Seating near a window I was basking on the sunset and nature. With no one around in that compartment, my state of solitude kicked in. I was having a debate with myself whether the solitude is enjoyable or not. If the solitude was alive, what it would feel about itself. Will it like solitude or not?

We all do like solitude, but do we know the line between solitude and loneliness? Have you ever asked yourself whether you are in solitude state or loneliness state. This poem is all about me asking questions to solitude and loneliness. 


தனிமையே தணிமையே!

தனிமையில் இனிமை காண முடியுமா?

தனிமை என்பது வரமா சாபமா?

துணை தேடுபவனுக்கு எழிதாய் கிடைத்து

உன்னை தேடுபவனுக்கு நீ கிடைப்பதில்லை!


பகலெல்லாம் நிலவை தேடும் சூரியனின்

வலி உனக்கு தெரியுமா?

இரவெல்லாம் சூரியனை தேடும் நிலவின் 

வலி தான் உனக்கு புரியுமா?


இணை தேடும் மீன் ஒன்றுக்கு7 தெரியவில்லை!

தனிமை தன்னை ஆட்கொண்டது என்று!

தனியாய் சுற்றும் நாடோடி சிங்கத்துக்கு தெரியாது,

தனிமை தன்னை ஆட்கொண்டது என்று!


இலை தழைகள் நிறைந்த காட்டில்,

தனியாய் பூத்த பூ ஒன்றுக்கு தெரியும்,

தன்னிடம் பேச இன்னொரு பூ ஒன்று,

இங்கு இல்லை என்று!


பாலைவனத்தில் முட்கள் நிறைந்து

தனியாய் நிற்கும் கள்ளி செடியை போல,

உன்னை தேடி வருபவனை நீ

கடினமான ஒருவனாய் மாற்றுவதேன்?


உன்னை வேண்டாம் என்று செல்பவனை

நீ உன் பக்கம் இழுத்து கொள்கிறாய்,

உன்னை வந்து சேர்பவனையும் 

நீ விளக்கி வைக்கிறாய்!


ஒரு வேளை உனக்கும் தனிமை,

என்ற ஒன்று தேவைப்படுகிறதா?

இல்லையெனில் உன்னை வேண்டாம் என்றவனின்,

கவனம் உனக்கு தேவை படுகிறதா?

Comments

Popular posts from this blog

இருக்கை கதைகள் (story of a park bench)

ஊரடங்கு (Lockdown)

இருளை கடந்த வண்ணத்துப்பூச்சி (A Butterfly which crossed Darkness)