காதல் கனவே (Love Dream)
We all have crushes, one-sided love, relationship or atleast a dream in where you are sharing your love with an unknown hazy person. It is always fresh like a blooming flower to think and dream about your loved one (atleast before marriage I think so 😝).
I thought of writing love poems in this forum for a long time. But I was in dilemma that people would read it or not. I realised that it's better to say what I think rather than thinking about what people might think.
I too have crushes, but this is poem is all about a dream I got last night. In that dream, I was in love with some unknown woman, but her appearance is still hazy for me ☁️.
Can't express my feelings in words about the dream. But I hope everyone feels like this, may be people in long distance relationship, people who are yet to propose or going to get married.
முதல் முறை முழுமதியை காணும் குழந்தை போல,
முதல் முறை உன்னை கண்டு ரசித்தேன்.
தன் குஞ்சை அடைகாக்கும் கோழியை போல,
உன்னை என் விழிகளில் அடைக்காத்தேன்.
ஆசையடி ஆசையடி உன் மேல் அவ்வளவு ஆசையடி,
உன் விரல்கள் கோர்த்து பல மையில்கள் நடக்க ஆசை,
உன் விழியில் விழுந்து உயிரில் கலக்க ஆசை,
உன் சேட்டைகளை கண்டு ரசித்து சிரித்திட ஆசை.
உன் மடியில் கிடந்து பல யுகங்கள் கடந்திட ஆசை,
உன் தோளில் சாய்ந்து பல கதைகள் பேசிட ஆசை,
உன் குரலை தாலாட்டாய் கேட்டு தூங்கிட ஆசை,
உன் கார்மேக கூந்தலுக்குள் ஒளிந்துகொள்ள ஆசை.
உன் சிரிப்பில் என் இதயம் தொலைத்திட ஆசை,
உன் உதடுகளில் பல முத்தங்கள் பதிததிட ஆசை,
உன் நண்பனாகவும் கணவனாகவும் காதலனாகவும் இருந்திட ஆசை,
ஆசையடி ஆசையடி அவ்வளவு ஆசையடி.
என் ஆசைகள் ஒவ்வொன்றாய் நிறைவேற்றிட,
என்னை தனிமையின் கொடுமையில் இருந்து விடுவிப்பாயா?

Sema
ReplyDelete