Tharkolai (Suicide)





We all would have thought about 'Suicide' at any point in life. WHO says, One person Suicides every 40 Seconds. But, have we thought about what will be life like for the people surrounding us if we suicide. 'Depression' a common factor for Suicide causes due to Mental Abuse, Physical Abuse, Lack of Self Confidence, Sexual abuse, Betrayals, Debt, and the list goes on. 


We all would have gone through depression. I myself have gone through several episodes of depression. Sometimes it's a delicate situation to speak to depressed people. Even saying positive affirmations might work reverse for them. But do all of us understand what it's like to be in a depression?


For some, it feels like they are alone in a deep-sea surrounded by only water on all four sides, and no one is there to help them to get out of the sea. But, in reality, they would have been surrounded by many people. They don't know how to communicate with others about their depression. And sometimes they avoid talking it to people for they may not understand their situation.


I might not be experienced or a wise guy. But, what I am trying to say is, if you are feeling depressed and you are reading this, put a smile on your face :). Everything is fine and will be fine. There are people out there to hear you out. 'Suicide' is not an end. It's the beginning of the end.

I have tried this poem little poem. Have experimented with two perspectives. (Please let know your valuable feedbacks in the comments:)





நாடினேன் இறைவா உயிர்நீதிமன்றம் நாடினேன்,

வேண்டினேன் என் உயிரை பறிக்க காலனை வேண்டினேன்,

கூறினேன் என் மனுவை நிராகரித்த காலனிடம் ,

என் கதையை கேட்க கூறினேன்.


கற்ற கல்வியோ கையை விரிக்க,

காதளித்தவளோ மாற்றான் கையை பிடிக்க,

நிறமும், உடலமைப்பும் அவமானங்களை பெருக்க,

செய்யும் தொழிலில் மரியாதை இழக்க,

போதை பழக்கங்கள் என் உயிரை குடிக்க,

உற்ற நண்பர்கள் விலகி இருக்க,

நல் வார்த்தைகளுக்கு ஏங்கி தவிக்க.


உணவு செரிக்கவில்லை! மனதில் நிம்மதியில்லை,

சோகம் முடியவில்லை! தூக்கம் என்னை அடையவில்லை,

எலி பொறிக்குள் சிக்கிய எலி போல,

எங்கும் தப்பி ஓடிவிட வழியில்லை.


கண்ணுக்குள் ஈரமில்லை! முகத்தில் சிரிப்பு இல்லை,

வெள்ளி நிலவை மறைக்கும் மேக கூட்டம் போல,

என் கண்ணை மறைத்தது மன அழுத்தம்.


கூட்டத்தின் நடுவே தனியாய் தண்ணீருக்குள் மூழ்கிட,

எட்டுத்திக்கும் ஆழ்கடல் மட்டுமே கண்ணிற்கு புலப்பட,

கரை சேர வழியில்லை! உதவி என கேட்டிட தெரியவில்லை.


நொடி பொழுதும் வாழ்வதா வீழ்வதா என தவித்திட,

அமைதியை தேடி நஞ்சை மருந்தாய் உட்கொண்டேன்.



God's Reply:

வண்ண குருடனை போல் தன் வாழ்க்கை நிரமற்றது

உலகம் வண்ணமயமானது என கூறும் மானிடா,

வண்ணமயமான உன் வாழ்வை இழந்தாய் என தெரிகிறதா?


தாயின் பாசத்தை இழந்தாய்,

தந்தையின் அரவணைப்பை இழந்தாய்,

நல்ல நண்பர்களை இழந்தாய்,

எழில் கொஞ்சும் இயற்கையை இழந்தாய்,

உன் வாழ்நாள் கனவுகளை இழந்தாய்,

உன் மேல் அன்பு வைத்தவர்களை இழந்தாய்,

அனுதினமும் உன் வாழ்க்கையை அனுபவிக்கும் பாக்கியம் இழந்தாய்.


மொட்டுக்கள் மலர்ந்தால் தான் கணிகள் கிடைக்ககும்,


ஆழ்கடல் சென்றால் தான் முத்துக்கள் கிடைக்கும்,


பத்து மாதம் சுமந் தால் தான் குழந்தை பிறக்கும்.


வாழ்ந்தால் தான் இப்பிறவியின் பதில் கிடைக்கும்.


 எனவே சுற்றுலா சென்று திரும்பும் குழந்தையை போல,

உன்னை உன் வாழ்க்கைக்கே அனுப்புகிறேன்.




Comments

Post a Comment

Popular posts from this blog

இருக்கை கதைகள் (story of a park bench)

ஊரடங்கு (Lockdown)

இருளை கடந்த வண்ணத்துப்பூச்சி (A Butterfly which crossed Darkness)