வாழ்க்கை எனும் ஓட்டம்(Life is an Endless Race)
I Wrote this one at a point when i felt everyone around me was achieving something and i was not. I was hoping something to happen big in my life (positively) without even making an effort to get out of Bed. But the universe and God had other plans!
We all humans will be longing for a victory or achievement in their life after continuous defeats or insults. Despite the damages we face, we should keep telling ourselves that life isn't over yet. Keep running! Keep running! And do please read these scribbles while you are busy running!
For the context: In this poem, I have linked life with a running race.
நெற்றியில் திலகமிட்டாள்,
வெற்றியுடன் திரும்பி வர,
குறை நிறைகளை களைந்தான்,
குறிக்கோளை எளிதில் அடைய.
சாத்தியக்கூறுகள் போதிப்பான்,
சரித்திரம் படைத்து திரும்பிட,
அரை காலில் அமர்ந்தேன்,
ஓட்டத்தை தொடங்கிட.
ஒளி வேகத்தில் எழுந்தேன்,
குண்டுகள் முழங்கிட.
கண்ட கனவுகள் அனைத்தும்
கால் மையில் தூரத்தில் புலப்பட.
மூச்சை முட்டும் அளவிற்கு
ஓடினேன் கனவை பிடித்திட.
சலைக்காத போட்டியாளர்களை கடந்தேன்
வேகமாய் ஒடிடும் நேரத்தை கடந்தேன்,
எதிர்மறை எண்ணங்களை கடன்தேன்,
அரை நிமிடம் நிற்க இதயம் துடித்தது,
நடந்து செல்ல வேண்டி கால்கள் பிடித்தது
இவை அனைத்தையும் கடந்தேன்.
அரை மையில் தூரம் கடந்தேன்,
பயமும் ஐயமும் நெருங்கியது என்னை,
மணபலம் விட்டு விலகியது என்னை
அரை நொடி அரை யுகமாக மாறி,
நம்பிக்கை உடைந்து தலை குனிந்த போது,
வியர்வை படர்ந்த விழியில் வெளிச்சம் தோன்றியது.
கண்ணில் இலக்கை கண்டு மணம் தாவியது,
விரு விருப்பாய் கை கால்கள் ஓடியது,
இலக்கை தொடும் அந்த நொடியில்,
கடந்து வந்த பாதைக்கான நன்றியை
கண்ணீராய் செலுத்தி மணம் நிறைந்தது.

Good bro,keep going and congrats.
ReplyDelete