சுதந்திர பறவை(Divorced Woman)
Name a few Multi-Talented personalities around you who can excel their talents at the same time across the fields like daycare, cooking, hospitality, health, etc.
Obviously, it's Mothers and Housewives. Sometimes we take them granted. But valuing their care and affection is the least they could expect from us.
I am not a person who knows women or mother's perspectives (not now too). But meeting and traveling with few women in the form of friends and mentors made me realize women's perspective slightly. Please spend 2 minutes and read the scribbles below,
ஆறு மணிக்கோ கண்கள் விழித்தேன்,
அடுப்பங்கரையில் அரை நாள் கழித்தேன்,
ஆர அமர உட்கார நேரமில்லை,
காசுக்கு இல்லை பஞ்சம்,
கண நேர ஓய்வுக்குத் தான் பஞ்சம்,
உங்கள் வயிற்றுக்கு இல்லை பஞ்சம்,
ஆனால் என் வலி மறக்க வார்த்தைகள் கேட்கும் நெஞ்சம்.
சிறு வயதில் சிட்டாய்ப் பறந்தேன்,
சிறு சட்டிகளுக்குள் மாட்டிக் கொண்டேன்,
கலைகள் பல கற்றேன் வாழ்க்கை சிறக்க,
அவை கல்வெட்டாய் போனது வாழ்க்கை முழுக்க.
வற்றிய கிணறு ஊறுக்கு உதவாது,
கற்ற கலைகள் கல்லறையில் உதவாது.
என் சரிதத்தின் சிறு பக்கம் நீங்கள் என புரிய,
என் வாழ்க்கையின் அரை புத்தகம் தேவைப்பட்டது ,
ஆண்மையை காட்ட அரை மணி நேரம் கிடைத்தல் உங்களுக்கு,
அன்பைக் காட்ட அரை நிமிடம் இல்லை,
தலை நிமிர்ந்து நான் நடக்க,
இனி உன் தேவை எனக்கில்லை.
இவை அனைத்தும் குறையல்ல இப்போது எனக்கு,


Comments
Post a Comment